இந்தியா-பிரான்ஸ் கூட்டு விமானப்படைப் பயிற்சி இன்று நிறைவு
இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டின் ரபேல் விமானங்கள் பிரான்சிடம் இருக்கும் ரபேல் விமானங்களை விட கூடுதலான வேகமும் தொழில்நுட்ப முன்னேற்றமும் கொண்டிருப்பதாக இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து ரபேல் விமானங்களையும் அளிக்கப்படும் என்று பிரான்ஸ் அரசு உறுதியளித்துள்ளது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக ஜோத்புர் விமானப்படைத்தளத்தில் இந்தியா-பிரான்ஸ் விமானப்படையினர் நடத்திய கூட்டு போர்ப்பயிற்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இந்த பயிற்சியில் இந்தியாவின் ரபேல் , சுகோய். மிக் ரக விமானங்களுடன் பிரான்ஸ் நாட்டின் ரபேல் உள்ளிட்ட போர்விமானங்கள் பங்கேற்றன.
Comments