டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா ராணுவ அணிவகுப்பில் முதல்முறையாக வங்கதேச படை பங்கேற்பு

0 1646
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா ராணுவ அணிவகுப்பில் முதல்முறையாக வங்கதேச படை பங்கேற்பு

டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா ராணுவ அணிவகுப்பில் முதல் முறையாக வங்காளதேச படைகளும் பங்கேற்கிறது.

குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற 26-ந் தேதி டெல்லியில் பிரமாண்டமான விழா நடைபெறுகிறது. இதில் இந்திய முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

இந்த ராணுவ அணிவகுப்பில் முதல் முறையாக வங்காளதேச படைகளும் பங்கேற்கிறது. அந்த நாட்டின் முப்படைகளை சேர்ந்த வீரர்கள் அடங்கிய குழுவினர், இந்த ஆண்டு அணிவகுப்பில் முதலில் செல்வார்கள்.

இந்த அணிவகுப்பில் வங்காளதேச ராணுவ இசைக்குழுவினரும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments