சீனாவின் உகான் நகரில் மக்களின் இயல்பு நிலை திரும்பியது
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவின் உகான் நகரில் மக்களின் இயல்பு நிலை திரும்பி விட்டது.
சுமார் 11 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரில் மக்கள் அதிகாலையிலேயே நடைபயிற்சி, தாய்சி பயிற்சி போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வைரஸ் தாக்குதல் உச்சத்தில் இருந்த நாட்களில் இங்கு அண்டை வீட்டினரை கூட பார்க்க மக்கள் அனுமதிக்கப்படவில்லை.
ஆனால் தற்போது கடை வீதிகளில் எல்லாம் வழக்கமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது. உகான் நகர சாலைகளில் வழக்கமான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
ஏறக்குறைய ஓராண்டுக்கு மேல் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ள இந்த கொரோனாவால் உலகம் முழுவதும் 20 லட்சத்துக்கு அதிகமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Comments