லாலு பிரசாத் உடல் நிலை கவலைக்கிடம்.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
முன்னாள் மத்திய அமைச்சரும், பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத்தின் உடல் நிலை கவலைக்கிடமாக மாறிய நிலையில் அவர் ராஞ்சியில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டார்.
டெல்லியில் அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக லாலுவின் மகன் தேஜஸ்வி தெரிவித்துள்ளார். லாலு பிரசாத்தின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்க மருத்துவர் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் லாலு பிரசாத்தின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
Comments