இந்தியாவில் இதுவரை 15.37 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

0 846
இந்தியாவில் இதுவரை 15.37 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

ந்தியாவில் இதுவரை 15 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு கடந்த 3-ந் தேதி இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 16-ந் தேதி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக 1 கோடி சுகாதார பணியாளர்களுக்கும், 2 கோடி முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, மொத்தம் 27 ஆயிரத்து 776 அமர்வுகள் நடத்தப்பட்டு, இதுவரை 15 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments