நேதாஜி கனவு கண்ட வலிமை மிகு பாரதம் இப்போது உருவாக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

0 3595
நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடும் எந்த முயற்சிக்கும் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நேதாஜி கனவு கண்ட வலிமை மிகுந்த இந்தியா இப்போது கட்டமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடும் எந்த முயற்சிக்கும் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நேதாஜி கனவு கண்ட வலிமை மிகுந்த இந்தியா இப்போது கட்டமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125 வது பிறந்தநாளை பராக்கிரம தினமாக மத்திய அரசு அறிவித்து அதற்கான கொண்டாட்டங்களை முன்னெடுத்து உள்ளது. இதையொட்டி கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, முதலில் நேதாஜின் நினைவு இல்லத்திற்கு சென்று பார்வையிட்டார்.

பின்னர் கொல்கத்தா விக்டோரியா நினைவு அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு நேதாஜியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சியை அவர் பார்வையிட்டார். பின்னர் அங்கு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய புகழ் பெற்ற Ekla Cholo Re' என்ற பாடலை உஷா உதூப் பாடினார். இதே போன்ற புகழ் பெற்ற பாடல்களும் இசைக்கப்பட்டன.

இதன் பின்னர் நேதாஜி 125 வது பிறந்த நாளை ஒட்டி சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டு பேசிய பிரதமர் மோடி, இனி ஒவ்வொரு ஆண்டிலும் நேதாஜியின் பிறந்த நாள் பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்றார், நேதாஜியின் வாழ்க்கை, அனைவருக்கும் உந்து சக்தி அளிக்கும் ஒன்று என்ற அவர், நேதாஜியை போல மனு உறுதியை பெற்றால் எதையும் சாதிக்க முடியும் என்றார்.

வறுமை, கல்லாமை, நோய் ஆகியவையே நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக நேதாஜி கருதியதாக கூறிய பிரதமர், மக்கள் அனைவரும் ஒன்று பட்டால் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்றார்.

மேற்கு வங்கத்தில் ஹவுராவில் இருந்து அரியானாவின் கல்காவுக்கு செல்லும் ரயில் இனிமேல் நேதாஜி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படுமென அவர் கூறினார். முதல் சுதந்திர இந்து ராஜ்யத்தை அமைத்து, அகண்ட பாரதம் என அறிவித்தவர் நேதாஜி தான் என பிரதமர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் முதல் சீனா வரை உள்ள எல்லையில் இந்தியா தனது வலிமை மிகுந்த அவதாரத்தை வெளிப்படுத்தி உள்ளதாக கூறிய அவர், நேதாஜி கனவு கண்ட வலிமை மிகு பாரதம் இப்போது உருவாக்கப்பட்டுள்ளது என்றார். நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடும் எந்த முயற்சிக்கும் இந்தியா இப்போது உரிய பதிலடியை கொடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

பின்னர் நேதாஜியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஒளி, ஒலி காட்சி நடத்தப்பட்டது...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments