குடியரசு தின விழாவில் கடலோர காவல் படை அணிவகுப்பை வழி நடத்துகிறார் தமிழக பெண் அதிகாரி

0 1805

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கடலோர காவல் படை அணிவகுப்பை, தமிழகத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி தேவிகா செல்வராஜ் 2-வது ஆண்டாக வழி நடத்த இருக்கிறார்.

குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கடலோர காவல்படை அணிவகுப்பிற்கு தமிழகத்தை சேர்ந்த பெண் அதிகாரி தேவிகா செல்வராஜ் தலைமை தாங்கினார்.

இந்த நிலையில் இந்த ஆண்டும், குடியரசு தின விழாவில், தேவிகா செல்வராஜ் கடலோர காவல்படை அணிவகுப்புக்கு தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

100 வீரர்கள் பங்கேற்கும் கடலோர காவல் படையினரின் அணிவகுப்பை தலைமை ஏற்று வழி நடத்திச் செல்ல இருக்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments