குடியரசு தின அணி வகுப்பில் நவீன ஆயுதங்களை காட்சிப் படுத்த திட்டம்
குடியரசு தின விழா பேரணியில் பல்வேறு ஆயுதங்கள் இடம் பெறுமென ராணுவம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில், 26 ஆம் தேதி நடைபெறும் அணிவகுப்பில், பினாகா ஏவுகணை ஏவும் அமைப்பு, பீஷ்மா பீரங்கிகள், பி.எம்.பி - 2 மற்றும் டி -90 ரக பீரங்கிகள், தற்காலிக பாலம் அமைக்கும் எந்திரம், பிரமோஸ் ஏவுகணைகள், மின் அணு போர் ஆயுதமான சம்விஜய், வான் பாதுகாப்பு ஆயுதம் உள்ளிட்டவை அணி வகுப்பில் இடம் பெறுமென கூறப்பட்டுள்ளது.
இத்துடன் வழக்கமான ஆயுதங்களுடன் ராணுவ வீர ர்கள் அணிவகுத்து வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments