5 சரக்கு ரயில் தொடர்களை இணைத்து 3.5 கி.மீ. நீளமான சரக்கு ரயிலை இயக்கித் தென்கிழக்கு மத்திய ரயில்வே சாதனை

0 3332

இந்திய ரயில்வே 5 சரக்கு ரயில் தொடர்களை ஒன்றிணைத்து மூன்றரைக் கிலோமீட்டர் நீளமுள்ள ஒரே ரயிலாக இயக்கி சாதனை படைத்துள்ளது.

தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் ராய்ப்பூர் கோட்டத்தில் 5 சரக்கு ரயில்களை ஒன்றிணைத்து 300 பெட்டிகள் கொண்ட ஒரே ரயிலாக இயக்கியுள்ளனர். வாசுகி எனப் பெயரிடப்பட்ட இந்த ரயில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பிலாய் முதல் கோர்பா வரையுள்ள 224 கிலோமீட்டர் தொலைவை 7 மணி நேரத்தில் கடந்துள்ளது.

முதலில் ஒரு எஞ்சினும் இறுதியில் ஒரு எஞ்சினும் கொண்ட இந்த ரயிலை ஓட்டுநர், உதவி ஓட்டுநர், காப்பாளர் ஆகிய மூவர் இயக்கியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments