திமுக ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்களின் பிரச்சனைகள் தீர்ப்பதாக மு.க.ஸ்டாலின் உறுதி

0 1972
திமுக ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்களின் பிரச்சனைகள் முழுமையாகத் தீர்க்கப்படும் என்றும், நெசவுத் தொழிலை ஊக்குவிக்கவும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகத் திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பத்தில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என உறுதியளித்தார். 

அதிமுக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி ஏறியுள்ளதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், திமுக ஆட்சியில் பெட்ரோல் மீதான வரியை நீக்கியும், டீசல் மீதான வரியைக் குறைத்தும் விலையைக் குறைத்ததாகக் குறிப்பிட்டார்.

பொள்ளாச்சி விவகாரத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத் தொடர்புள்ளதாகக் குற்றஞ்சாட்டிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி நீதிமன்றம் அமைத்துப் பெண்களுக்கு எதிரான குற்றங்களை உடனடியாக விசாரித்துத் தண்டனை கொடுக்க வழிவகை செய்வோம் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments