இந்திய வங்கிகளில் கடன் பெற்று தப்பிச் சென்ற விஜய் மல்லையா லண்டனில் தஞ்சம் கேட்டு விண்ணப்பித்திருப்பதாக தகவல்

0 2155
இந்திய வங்கிகளில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று லண்டனுக்கு தப்பிச் சென்ற விஜய்மல்லையா, தொடர்ந்து அங்கு தங்கியிருக்க தஞ்சம் கேட்டு விண்ணப்பத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்திய வங்கிகளில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று லண்டனுக்கு தப்பிச் சென்ற விஜய்மல்லையா, தொடர்ந்து அங்கு தங்கியிருக்க தஞ்சம் கேட்டு விண்ணப்பத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடனை திரும்பச் செலுத்தாமல் கைதுக்கு பயந்து லண்டன் சென்ற மல்லையாவை மீண்டும் நாடு கடத்த இந்தியா சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்றமும் உத்தரவிட்டது. மல்லையா தாக்கல் செய்த மேல்முறையிட்டு மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் கடந்த ஆண்டே நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்க மல்லையாவுக்கு இறுதியாக தஞ்சம் கோரும் வாய்ப்பு இருப்பதாகவும் அதன் காரணமாகவே அவர் தற்போது வரை நாடு கடத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments