நாளை நடைபெற உள்ளது இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் நிலையிலான ஒன்பதாம் சுற்றுப் பேச்சுவார்த்தை
லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள நிலைப்பாடு குறித்து இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் நிலையிலான ஒன்பதாம் சுற்றுப் பேச்சு நாளை நடைபெற உள்ளது.
லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் முந்தைய நிலைகளை மீறிச் சீன ராணுவம் படையினரைக் குவித்துள்ளது. சீனாவுக்குப் பதிலடி கொடுக்க இந்தியாவும் படைவீரர்களையும் படைக்கருவிகளையும் குவித்துள்ளது.
எல்லையில் முந்தைய நிலையையும் அமைதியையும் பராமரிப்பது தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே கடந்த ஆண்டில் 8 சுற்றுப் பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில் சீனப் பகுதியில் உள்ள மால்டோ என்னுமிடத்தில் நாளை ஒன்பதாம் சுற்றுப் பேச்சு நடைபெற உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments