காதில் தீ வைத்ததால் காட்டு யானை உயிரிழந்த வழக்கில் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க பரிந்துரை

0 3944

மசினக்குடியில் யானைக்கு தீ வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கு, முதுமலை புலிகள் காப்பாகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெட்ரோல் கலந்த டயரில் தீ வைத்து வீசியதால் காதில் தீ காயம் ஏற்பட்ட காட்டு யானை, சிகிச்சைப் பலன் இன்றி 5 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தது.

இதனை அடுத்து யானைக்கு தீ வைத்த தங்கும் விடுதி உரிமையாளர் ரேய்மண்டீன் மற்றும் அவரது உதவியாளர் பிரசாந்த் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மசினக்குடியில் உள்ள ரேய்மண்டீனின் தங்கும் விடுத்திக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சீல் வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments