தாய்லாந்தில் துதிக்கையுடன் பிறந்த அபூர்வ பன்றிக்குட்டி.. இறந்த பின்பும் வழிபாடு செய்த உரிமையாளர்

0 1889

தாய்லாந்தில் யானையின் உருவத்தில் பிறந்த பன்றிக்குட்டி ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தாய்லாந்தின் நக்கோன் ராட்சாசிமா மாகாணத்தில்(Nakhon Ratchasima province) வசிப்பவர் 75 வயதான தென்குவே ப்ளீடி(Tenguay Pleedee).இவர் அங்கு விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 19 தேதி அன்று, தென்குவே ப்ளீடி வளர்த்து வரும் பன்றி நான்கு குட்டிகளை ஈன்றது.

மூன்று பன்றிக்குட்டிகள் இயல்பாக பிறந்த நிலையில், கடைசி பன்றிக்குட்டி மட்டும், துதிக்கை போன்ற மூக்கு, பெரிய காதுகள், பெரிய கண்கள் மற்றும் நீண்ட நாக்குடன் பிறந்தது.

வித்தியாசமாக பிறந்த இந்த பன்றிக்குட்டி, யானையின் அம்சங்களுடன், பிள்ளையார் போன்று இருந்ததால், மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டது. 

துதிக்கை போன்ற மூக்குடன் பிறந்ததால் மூச்சுவிடுவதில் சிரமப்பட்ட அந்த பன்றிக்குட்டி பிறந்த 30 நிமிடங்களில் பரிதாபமாக இறந்தது. பன்றிக்குட்டி இறந்த பின்பும், சிறிய தூபம் போன்ற ஒன்றில் மலர்கள் கொண்டு அலங்கரித்து, அந்த பன்றிக்குட்டியை வைத்து வழிபட்டார் தென்குவே ப்ளீடி. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும், இந்த அபூர்வ பன்றிக்குட்டியை வழிபாடு செய்து சென்றனர்.

இது குறித்து தென்குவே ப்ளீடி கூறுகையில், பன்றிக்குட்டி இறந்தபோதிலும், அதனை அதிர்ஷ்டம் வாய்ந்ததாக கருதுவதாகவும், அந்த பன்றிக்குட்டி அவர் வீட்டில் பிறந்ததுக்கு காரணம் உண்டு என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments