சென்னை சென்ட்ரல் எதிரே சுரங்க நடைபாதை அமைக்கும் பணி -தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு
சென்னை சென்ட்ரல் எதிரில் பூந்தமல்லி சாலையில் அமைக்கப்படும் சுரங்க நடைபாதை பணியை 15 நாட்களில் முடிக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுரங்க பாதைக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாலத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிகள் இதுவரை முடியவில்லை எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டது.
Comments