தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வராத சில சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி வேண்டும் என பிறகு வந்தால் முன்னுரிமை இல்லை - சுகாதாரத்துறை தகவல்
தடுப்பூசி போட்டுக்கொள்ள தற்போது முன்வராத சுகாதார பணியாளர்களுக்கு வேண்டும் என்று வரும் போது முன்னுரிமை வழங்கப்படாது என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திகொள்ள, சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதன் படி கடந்த 16ஆம் தேதி முதல் சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் சிலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.
எனவே கோவின் செயலி மூலம் தகவல் பெறப்பட்டு, தற்போது தடுப்பூசி போட முன்வராத முன்களப்பணியாளர்கள் தங்களுக்கு தேவை என்று வரும் போது முன்னுரிமை வழங்கப்படமாட்டாது.
Comments