மேலாளர் செல்போனில் இருந்து டிரைவருக்கு போன்... கூடவே இருந்த செவ்வாழையால் சிக்கிய 'பேபி' கொள்ளையர்கள்!

0 35583
கொள்ளையர்கள் தப்பிய கண்டெய்னர் லாரி மற்றும் நகைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதி

ஓசூரில் முத்தூட் நகை நிறுவனத்தில் ரூ. 7 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் 6 பேர் மற்றும் ஹைதரபாத் தப்பி செல்ல உதவிய கண்டெய்னர் டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் நகை அடமான நிறுவனத்தில் நேற்று காலை ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல் அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.7 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது . கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர் 10 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில், தமிழக காவல்துறையினர் உதவியுடன் ஆந்திர, தெலங்கானா காவல்துறையினர் இன்று காலை ஹைதராபாத் பகுதியில் பதுங்கியிருந்த கொள்ளைக் கும்பலை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். கைதானவர்களிடத்தில் இருந்து7  துப்பாக்கிகள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நகையை கொள்ளையடித்த கும்பல் அந்த நிறுவனத்திலுள்ள பேக் ஒன்றில் நகைகளை போட்டு கொண்டு பைக்கில் சென்றுள்ளனர். அந்த பேக்கை ஜி.பி.எஸ் டிராக் செய்ய முடியுமென்று சொல்லப்படுகிறது. இதனால், அந்த பேக்கை கர்நாடக எல்லையில் அத்திப்பள்ளி - ஆணைக்கல் சாலையில் கற்பூர் என்ற இடத்தில் கொள்ளையர்கள் போட்டுள்ளனர். பின்னர், நிறுவனத்தின் மேலாளரிடத்தில் இருந்து கைப்பற்றிய செல்போனில் இருந்து கண்டெய்னர் லாரி டிரைவருக்கு போன் செய்து, தாங்கள் நிற்கும் இடத்துக்கு வர கூறியுள்ளனர். கண்டெய்னர் லாரி வந்ததும் பேக் வீசப்பட்ட இடத்தில் மேலாளரின் செல்போனையும் வீசி விட்டு சென் றுவிட்டனர்.

இந்த நிலையில், பேக் கிடந்த இடத்தை கண்டுபிடித்த போலீஸார், பக்கத்திலிருந்த செல்போனையும் கண்டெடுத்ததனர். அப்போது, மேலாளரின் செல்போனில் இருந்து இரண்டு புதிய நபர்களுக்கு போன் செய்யப்ட்டது தெரிய வந்தது. அதில், ஒருவர் கண்டெய்னர் லாரி டிரைவர் செல்போன் எண் ஆகும். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட போலீஸார் கண்டெய்னர் லாரி டிரைவரின் செல்போனை டிராக் செய்ததில் வண்டி ஹைதரபாத் நோக்கி செல்வது தெரிய வந்தது. தொடர்ந்து, சைபர்பாத் போலீஸார் உதவியுடன் கொள்ளையர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். லாரி டிரைவரும் பிடிபட்டுள்ளார்.

கொள்ளையர்கள் கொள்ளையடிப்பதில் வல்லவர்களாக இருந்தாலும் கூடவே இருக்கிறியே செவ்வாழை என்கிற கதையாக கண்டெய்னர் டிரைவர் செல்போனால் கொள்ளையடித்த 18 மணி நேரத்தில் பிடிபட்டனர்.

இது குறித்து சைபர்பாத் போலீஸ் கமிஷனர் சந்தீப் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதப்பூர், ஷாம்ஷாபாத், பால்நகர் போலீஸார் இணைந்து நடத்திய தேடுதல் முயற்சியில் 7 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடத்தில் இருந்து 7 பிஸ்டல்கள் 100 தோட்டாக்கள், 20 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments