எல்லையில் படைகளை சீனா வாபஸ் பெறாவிட்டால் இந்தியாவும் படைகளை திரும்பப் பெறாது ! - அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
எல்லையில் சீனா தனது படைகளை திரும்பப் பெறாவிட்டால், இந்தியா படைகளை திரும்பப் பெறாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கல்வான் பள்ளத்தாக்கு விவகாரத்திற்கு பின்னர் இருநாடுகளும் எல்லையில் படைகளை குவித்தன.பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் படைகள் வாபஸ் பெறப்படவில்லை.
இந்நிலையில், எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை இந்தியா வேகமாக உருவாக்கி வருவதாகவும், சில திட்டங்களுக்கு சீனா ஆட்சேபனை தெரிவித்துள்ளதாகவும் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அமைச்சர் ராஜ்நாத் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்தியா பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Comments