முத்தூட் பைனான்ஸ் கொள்ளையர்களை 18 மணி நேரத்தில் பிடித்த போலீசாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு
ஓசூர் முத்தூட் பைனான்ஸ் கொள்ளையர்களை 18 மணி நேரத்தில் பிடித்த போலீசாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் முத்தூட் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற கொள்ளையில் திருடு போன 25 கிலோ தங்கத்தையும், கொள்ளையர்களையும் துரிதமாக செயல்பட்டு, 18 மணி நேரத்தில் பிடித்த தமிழ்நாடு காவல்துறையினருக்கு, குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறைக்கு தன்னுடைய மனமார்ந்த பாராட்டுகள் என ட்விட்டரில் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.
இது, தமிழ்நாடு காவல்துறையினரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம் என்றும் முதலமைச்சர் பாராட்டியுள்ளார்.
Comments