தொலைத்தொடர்புத் துறையிலும் கால்பதிக்கத் திட்டமிட்டுள்ள எலோன் மஸ்க்; ஸ்டார்லிங் இணையத்தளச் சேவைக்கு 1000 செயற்கைக்கோள்கள்..!
மின்சாரக் கார் தயாரிப்பு, ராக்கெட் தயாரிப்பு ஆகியவற்றில் வெற்றி பெற்று உலகின் மிகப்பெரும் செல்வந்தரான எலோன் மஸ்க், தொலைத்தொடர்புத் துறையிலும் கால்பதிக்கத் திட்டமிட்டுள்ளார்.
எலோன் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் மின்சாரக் கார்களையும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மறு பயன்பாட்டு ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் என்னும் பெயரில் இணையத்தள வசதியை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதுடன் அமெரிக்கா, பிரிட்டன், கனடா நாடுகளில் பல்வேறு நிறுவனங்களுடன் உடன்பாடு செய்துள்ளது.
விமானங்களில் இணையத்தள சேவை, கடல்சார் தொலைத்தொடர்பு சேவைகள், சீனா, இந்தியா நாடுகளில் ஊரக வாடிக்கையாளர்களைக் கவர்வது ஆகியவற்றின் மூலம் 73 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தையை உருவாக்க முடியும் என முதலீட்டாளர்களிடம் ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது.
Comments