சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக, பெங்களூரு அரசு மருத்துவமனை தகவல்

0 3732
சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக, பெங்களூரு அரசு மருத்துவமனை தகவல்

சிகலா உடல்நிலை சீராக இருப்பதாக, பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் குறைந்திருப்பதாகவும், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, சுவாசம் சீராக இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 98 சதவீதமாக உள்ளது என்றும், சசிகலா சுயநினைவுடன் சிகிச்சைக்கு முழுஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் சசிகலா உள்ளதாகவும் விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது. சசிகலாவை தனியார் மருத்துவமனையில் சேர்க்க உறவினர்கள் கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் அக்கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றும், விக்டோரியா அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments