மொசாம்பிக் நாட்டை தாக்கிய கடும் சூறாவளி : பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாயின
மொசாம்பிக் நாட்டில் வீசிய கடும் சூறாவளி தாக்குதலில் அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
Eloise சூறாவளி இன்னும் இரண்டு தினங்களில் மேலும் தீவிரமடைந்து பேரழிவை ஏற்படுத்தும் என்று அந்நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மொசாம்பிக் முழுவதும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
140கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய இந்த சூறாவளியால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 200மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
Comments