காக்கிநாடா துறைமுகத்தில் நின்றிருந்த மீன்பிடி படகில் டீசல் கசிவின் காரணமாக பயங்கர தீ விபத்து
ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்தில் நின்றிருந்த மீன்பிடி படகில் டீசல் கசிவின் காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்வதற்காக படகை ஸ்டார்ட் செய்யும்போது திடீரென தீப்பிடித்து மளமளவென பற்றி எரிந்தது. சுதாரித்துக் கொண்ட மீனவர்கள், உடனடியாக படகை விட்டு வெளியேறியதால், காயத்துடன் உயிர் தப்பினர்.
மீனவர் ஒருவர் தீக்காயத்துடன் தப்பி வந்த காட்சிகள் கண்கலங்க வைத்தன.
டீசல் செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டிருந்த நிலையில், இதனை கவனிக்காத மீனவர்கள் படகை ஸ்டார்ட் செய்யும் போது தீப்பொறி ஏற்பட்டு, தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Comments