இஸ்ரோவின் அடுத்த ராக்கெட் தனியார் நிறுவன செயற்கைக்கோள்களுடன் பிப்ரவரி 28ந் தேதி விண்ணில் ஏவத் திட்டம்

0 4017
இஸ்ரோவின் அடுத்த ராக்கெட் தனியார் நிறுவன செயற்கைக்கோள்களுடன் பிப்ரவரி 28ந் தேதி விண்ணில் ஏவத் திட்டம்

ந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து, பிரேசில் நாட்டின் அமேசானியா-1 மற்றும் 3 தனியார் செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி 51 ரக ராக்கெட் அடுத்த மாதம் 28ந்தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமேசான் வனத்தின் சுற்றுச்சூழல் அமைப்பை கண்காணிக்க Amazonia-1 என்ற செயற்கை கோளை பிரேசில் விண்ணில் செலுத்த உள்ளது.

Amazonia-1 செயற்கை கோள் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ANAND, ‘SATISH SAT’ மற்றும் UNIT-SAT’ஆகிய 3 தனியார் செயற்கை கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன.

இதுதொடர்பாக பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், பி.எஸ்.எல்.வி-சி 51 தனியார் செயற்கைக்கோள்களை செலுத்தும் விண்வெளி சீர்திருத்தங்களின் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கப் போவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments