உள்நாட்டுத் தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது: தி லான்சட் இதழில் வெளியான ஆய்வுகளில் புதிய தகவல்
உள்நாட்டு தயாரிப்பான கொரோனா தடுப்பூசி கோவாக்சின் முழுவதும் பாதுகாப்பானது என்று சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் குறித்த சந்தேகங்களை ஆய்வுகள் தீர்த்து வைத்துள்ளன. கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுவதாகவும், எதிர்ப்புசக்தி அதிகரித்துள்ளதாகவும் முதல் கட்ட பரிசோதனையில் ஊசி போட்டுக் கொண்ட 375 பேரின் தகவல்களுடன் இந்த ஆய்வுகள் தி லான்சட் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
முதல்கட்ட பரிசோதனையில் காணப்பட்ட சில எதிர்வினைகள் இரண்டாம் கட்ட பரிசோதனையில் இல்லை என்றும் அதன் அடுத்த பரிசோதனையில் மருந்தின் தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ள கோவாக்சின் 26 ஆயிரம் பேருக்கு செலுத்தப்படுகிறது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் புனேயில் உள்ள சீரம் இந்தியா நிறுவனம் கூட்டாக தயாரித்த கோவிஷீல்டுக்கு நிகராக கோவாக்சின் இல்லை என்ற விமர்சனங்கள் இதன் மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
Comments