கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை

0 4662

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா உடல்நிலை சீராக இருப்பதாக பெங்களூரு மருத்துவமனை தெரிவித்துள்ளது.  66 வயதான சசிகலாவுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு பாதிப்பு இருப்பதால், விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவின் அளவு 98 சதவீதமாக இருப்பதாகவும், சுயநினைவுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. நுரையீரலில் தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால், மூச்சிரைப்பு இருப்பதாகவும், 14 நாட்கள் வரை தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட உள்ள அவருக்கு, கொரோனாவுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments