குடியரசு தின விழா... நவீன ஆயுதங்களுடன் அணிவகுப்பு..!
குடியரசு தின விழா பேரணியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை நவீன ஆயுதங்களுடன் அணிவகுக்க உள்ளது. ஒசாமா பின் லேடனை கொல்ல, அமெரிக்க படையினர் பயன்படுத்தியதை போன்ற விசேச கண்ணாடிகளையும் அந்த படையினர் அணிந்து வர உள்ளனர்.
26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள குடியரசு தின விழாவை ஒட்டி டெல்லியில் ராணுவம் மற்றும் காவல் படையினர் அணிவகுப்பு நடத்த உள்ளனர். இதில் பங்கேற்க மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் தயாராகி வருகின்றனர்.
இதில் இரவு நேரத்தில் தெள்ள தெளிவாக பார்க்க உதவும் சிறப்பு கண்ணாடிகள் அணிந்து அணிவகுக்க உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பாகிஸ்தானில் பதுங்கி இருந்து ஒசாமா பின்லேடனை கொன்ற போது, அமெரிக்க கமாண்டோ படையினர் இதே போன்று விசேச கண்ணாடிகளை அணிந்திருந்தனர்.
இந்த ரகத்தை சேர்ந்த கண்ணாடிகள் இப்போது, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கமாண்டோக்களும் பயன்படுத்தி வருகின்றனர். 120 டிகிரி கோணத்தில் பார்க்க உதவும் இந்த கருவிகள், நான்கு டெலஸ் கோப்களை கொண்டிருக்கும்.
இரவின் கடும் இருட்டையும் ஊடுருவி பார்க்க உதவும் சிறப்ப அம்சம் கொண்ட இந்த பைனாகுலர்கள், வயர் மூலம் கண் கண்ணாடியுடன் இணைகப்பட்டிருக்கும். இதனால் இருட்டில் எந்த மூலை முடுக்கில் எதிரி ஒளிந்திருந்தாலும் கண்டறிய முடியுமென அதிகாரிக்ள கூறியுள்ளனர்.
முதல் முறையாக இந்த கண்ணாடிகளை அணிந்து ரிசர்வ் போலீஸ் படை கமாண்டோக்கள் அணிவகுக்க உள்ளனர். இதே போன்று எதிரியின் துப்பாக்கி எங்கிருந்து இயக்கப்படுகிறது என்பதை கண்டறிய உதவும் கன் பையர் லோகேட்டர் என்ற நவீன கருவி, எதிரியின் உடல் வெப்பத்தை துல்லியமாக உணர்ந்து காட்டும் நவீன கருவி ஆகியவற்றையும், கமாண்டோக்கள் ஏந்தி அணிவகுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments