இலங்கை, பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கிய சர்வதேச போதை கடத்தல் கும்பல் சென்னையில் கைது
இலங்கை மற்றும் பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கிவந்த ஹொராயின் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பிடிபட்டிருக்கிறது. சர்வதேச கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு, சென்னையில் கைதான 2 பேர் உட்பட, 10 பேர் கும்பலை, போலீசார் கைது செய்தனர்.
மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவின், சென்னை மண்டல போலீசார், இலங்கையைச் சேர்ந்த நவாஸ், முகமது அப்னாஸ் ஆகிய 2 பேரை, சென்னை பெருங்குடியை அடுத்த காரப்பாக்கத்தில் வைத்து கைது செய்தனர். இருவரும், சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் மூளையாக செயல்பட்டதை கண்டறிந்தனர்.
கடந்த நவம்பர் மாதம் 11ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகம் அருகே, சுமார் 100 கிலோ ஹெராயின், 18 கிலோ மெத்தாம்பெட்டமைன் என பல நூறு கோடி ரூபாய் மதிப்புடையதாக கூறப்படும் போதைப்பொருளோடு பிடிப்பட்ட 6 பேர் கொடுத்த துப்பு மூலம், இந்த இருவரும் பிடிபட்டதாக, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகின்றனர்.
Comments