சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை செய்ய கர்நாடகா சிறைத்துறை முடிவு

0 3531

சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை செய்ய கர்நாடகா சிறைத்துறை முடிவு செய்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் விடுதலை இந்த மாதம் 27ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

காய்ச்சல், மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி ஆனது.

அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இந்நிலையில் சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை செய்ய கர்நாடகா சிறைத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் 2 பெண் கைதிகள், அதிகாரிகள் உள்பட 8 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments