கொரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானவை, அவற்றை போட்டுக் கொள்ள தயங்க வேண்டாம் - பிரதமர் மோடி
கொரோனா தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை என்றும், அவற்றை போட்டுக் கொள்ள தயங்க வேண்டாம் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பில் இந்திய தன்னிறைவு பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், தடுப்பூசி போடும் மருத்துவ பணியாளர்கள் ஆகியோரோடு பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், கடந்த 6 ஆண்டுகளிலும் வாரணாசி தொகுதியில் மருத்துவ வசதி பல மடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
கொரோனாவுக்கு எதிராக போரில் இந்திய உலகிற்கு ஒரு செய்தியை விடுத்துள்ளது என்றார். தடுப்பூசி மருந்தை கண்டறிவதில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளதாக கூறிய அவர், ஒன்றல்ல, இரு மருந்துகளை இந்தியா உருவாக்கி உள்ளது என்றார்.
உலகிலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருவதாக கூறிய அவர், நாட்டின் மூலை முடுக்கு எங்கும் தடுப்பூசி மருந்து கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது என்றார். தடுப்பூசி மருந்து தயாரிப்பில் இந்தியா முற்றிலும் தன்னிறவை எட்டி உள்ளதாக அவர் கூறினார்.
நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடுவதோடு, அண்டை நாடுகளுக்கும் தடுப்பு மருந்தை கொடுத்து இந்தியா உதவி வருவதாக அவர் தெரிவித்தார்.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள இரு தடுப்பு மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவை என்றும், அவற்றை போட்டுக் கொள்ள தயங்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். பல மாதங்களாக நமது நாட்டு விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்து ஆராய்ந்து மருந்துகளை உருவாக்கி உள்ளதாக அவர் கூறினார்.
Comments