டுவிட்டரில் எலான் மஸ்க் சவால்... ஜெயிச்சா 100 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு.!
உலகின் முதல் பணக்காரரும், உலக புகழ் பெற்ற தொழிலதிபருமான எலான் மஸ்க் ((Elon Musk )) டுவிட்டரில் ((Twitter )) ஒரு சவாலை விடுத்துள்ளார். அதில் வெற்றி பெறுவோருக்கு, 100 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று தனது டுவிட்டர்((Twitter )) பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
21ஆம் நூற்றாண்டின் மிக பெரும் சவாலாக இருப்பது பருவநிலை மாற்றம். பூமி வெப்பமயமாவதால் , பல இடங்களில் பனி உருகி, கடல் மட்டமும் உயர்ந்து வருகிறது . அதன் விளைவாக பல இயற்கை சீற்றங்களை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. விஞ்ஞானிகள், இந்த வெப்பமாற்றத்தால் நேரிடும் விளைவுகள் குறித்து தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இருப்பினும் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்வதாக தெரியவில்லை.
வாகனங்களிலிருந்து வெளியேறும் கார்பன் ((Carbon )), பூமியை வெப்பமயமாக்குவதில் அதிக பங்கு வகிக்கிறது. பருவநிலை மாற்றத்தை தவிர்க்கும் முயற்சியில், எலன் மஸ்க் ((Elon Musk )) தொடர்ந்து அக்கறை செலுத்திவருகிறார். அதன் ஒரு அங்கமாக மின்சாரத்தில் இயங்கும் கார்களை தயாரிக்கும் டெஸ்லா ((Tesla )) நிறுவனத்தை 2003ஆம் ஆண்டு நிறுவினார்.
அதன் தொடர்ச்சியாக, கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு தொகையாக வழங்கப்படும் என்று எலன் மஸ்க் ((Elon Musk)) தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
அதற்கு, பாலோவர் ((Follower)) ஒருவர் ,கார்பன் வெளியேற்றத்தை சரிசெய்ய, சபாட்டியர் செயல்முறையை ((sabatier reactor )) பயன்படுத்தலாம் என்று பரிந்துரை செய்திருந்தார். சபாட்டியர் செயல்முறை ((sabatier reactor )) என்பது ஒரு நிக்கல் வினையூக்கியை((nickel catalyst )) கொண்டு கார்பன் டை ஆக்சைடுடன்((carbon di oxide )) உயர்ந்த வெப்பநிலை மற்றும் அழுத்தங்களில் ஹைட்ரஜன்((hydrogen ))வினைபுரிவதனால் நீர் மற்றும் மீத்தேன் தயாரிக்கும் முறை.
பாலோவரின் கேள்விக்கு, பதிலளித்த எலான் மஸ்க், இது ஒரு முழுமையான தீர்வு இல்லை என்றும், அறை வெப்பநிலையில் திடமாக இருக்க CH4 ஐ விட நீண்ட சங்கிலி ஹைட்ரோகார்பன்கள் ((hydrocarbon )) தேவை என்றும் கூறியுள்ளார்.
Comments