சிவப்பு கங்காரு ஈன்ற வெள்ளை நிற கங்காரு.. அதிசயிக்கும் அமெரிக்கர்கள்

0 2571

அமெரிக்கா உயிரியல் பூங்காவில் பிறந்த வெள்ளை நிற கங்காரு குட்டி ஒன்று மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

அமெரிக்காவின், நியூயார்க்((New York ))நகரில், "தி அனிமல் அட்வெஞ்சர் பார்க்" ((The Animal adventure Park))என்ற உயிரியல் பூங்கா உள்ளது. இந்த உயிரியல் பூங்காவில் காட்டெருமை, ஒட்டகம், கங்காரு ,ஓநாய்கள் போன்ற பலவகையான மிருகங்கள் உள்ளன. இந்த பூங்காவில் தான் வெள்ளை நிற கங்காரு குட்டி பிறந்துள்ளது.


பொதுவாக நான்கு வகையான கங்காருக்கள் மட்டுமே தற்போது அதிகளவில் காணப்பட்டுவருகிறது. அவை ரெட் கங்காரு (Red Kangaroo ), ஈஸ்டர்ன் கிரேய் கங்காரு (Eastern gray Kangaroo ), வெஸ்டர்ன் கிரேய் கங்காரு (Western gray Kangaroo ) மற்றும் ஆண்டிலோபின் கங்காரு (Antilopine Kangaroo ) என்றழைக்கப்படும். கங்காருக்கள் பிறக்கும் பொழுது மனிதனின் கை கட்டைவிரல் நகத்தின் அளவிலேயே இருக்கும். கங்காரு குட்டிகள் தன் தாயின் மடியில் உள்ள பையில் தான் வளரும். அப்படி பிறந்து நான்கு முதல் ஐந்து மாதங்கள் கழித்து, பூங்காவின் பராமரிப்பாளர்கள், கங்காருக்குட்டிகளை தாயின் பையிலிருந்து எடுத்து மருத்துவ பரிசோதனை செய்வது வழக்கம். அதே போல், "தி அனிமல் அட்வெஞ்சர் பார்க்" ((The Animal adventure Park)) பூங்காவில் வளர்க்கப்படும், ரோஸி என்ற சிகப்பு கங்காருவின் பையிலிருந்து எடுக்கப்பட்ட ’வெள்ளை கங்காரு குட்டியைக்’ கண்ட பராமரிப்பாளர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இதனைப் பற்றிக் கூறியுள்ள உயிரியல் பூங்காவின் பராமரிப்பாளர்கள், லூசிசம்((leucism )) என்ற அரியவகை நிலையால் தான், இந்த சிவப்பு கங்காருவின் குட்டி வெள்ளை நிறத்தில் பிறந்துள்ளதாகக் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த குட்டியின் தாய் மற்றும் தந்தையால் ஏற்பட்ட மரபணு கலவையே அதன் வெள்ளை நிறத்திற்குக் காரணம் என்றும் பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

லூசிசம்((leucism )) என்பது மிருகங்கள் மற்றும் பறவைகளுக்கு ஏற்படும் நிறத்துடன் தொடர்புடைய ஒரு நிலை. லூசிசம்((leucism )) உள்ள மிருகம் அல்லது பறவையின் கண் பகுதி தவிர்த்து, தோல், முடி , இறகு ஆகிய பகுதிகள் வெள்ளை நிறத்தில் மாறிவிடும். லூசிசம்((leucism )) நிலையுடன் அமெரிக்காவில் பிறந்த முதல் கங்காரு குட்டி இது தான் என்றும் உயிரியல் பூங்காவின் பராமரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இணையத்தளத்தில் தற்போது வைரலாகி வரும் இந்த கங்காரு குட்டியின் புகைப்படத்திற்கு, லைக்குகளும் கமெண்டுகளும் குவிந்து வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments