ஆன்லைன் ஷாப்பிங் பரிதாபங்கள்.... மாட்டு சாணம் நல்லாவே இல்லை என ரிவ்யூ!

0 3875

அமேசானில் மாட்டு சாணத்தை வாங்கி சாப்பிட்டதாகவும் அதனை சாப்பிடும்போது நன்றாகவே இல்லை எனவும் அமேசான் வாடிக்கையாளர் ஒருவர் ரிவ்யூ கொடுத்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்மார்ட் போன்களின் வருகையால் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. வீட்டில் இருந்தப்படியே செல்போன் மூலம் ஆன்லைன் தளங்களில், பொருட்களை ஆர்டர் செய்தால் போதும், அவை வீடு தேடி வந்துவிடும். வசதிக்கேற்ப சோப்பு டப்பா முதல் சோஃபா கம்பர்ட் வரை ஆன்லைன் தளங்களிலேயே அத்தனையும் கிடைக்கின்றன.

இவற்றில் தேறிய வாடிக்கையாளர்கள் சிலர், பொருளை வாங்குவதற்கு முன்பு ஏற்கனவே இந்த பொருளை வாங்கிய வாடிக்கையாளர்கள், என்ன நினைக்கிறார்கள் என்பதை ரிவ்யூவில் படித்துவிட்டே பொருளை ஆர்டர் செய்வார்கள்.

அந்தவகையில், மாட்டு சாணத்திற்கான ரிவ்யூவை படித்துக்கொண்டிருந்த சஞ்சய் அரோரா எனும் நபர் ஒருவர், மிகவும் வேடிக்காயன ரிவ்யூ ஒன்றைப் பார்த்துள்ளார். அதில், ஒருவர் “நான் சாணத்தை சாப்பிட்ட போது நன்றாகவே இல்லை. அது மண் மற்றும் புல்லின் பிளேவரில் இருந்தது. அதை சாப்பிட்ட பிறகு தனக்கு வயிற்று வலி மற்றும் டயோரியா ஏற்பட்டதாக” பதிவிட்டுள்ளார்.

அந்த ஸ்கிரீன் ஷாட்களை சஞ்சய் அரோரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, இது என்னுடைய இந்தியா என்று குறிப்பிட்டுள்ளார். இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோர் அந்த போஸ்டை லைக் செய்துள்ளனர். பலர் இது உண்மையா எனவும், கேள்வி எழுப்பியுள்ளனர். இன்னும் சிலரோ, மாட்டுச்சானத்தை சாப்ட்டுருக்கிங்க, மாட்டுச்சானம் வேற எப்புடி இருக்கும் என அவரை கலாய்த்து வருகின்றனர்.

அமேசானில் , மாட்டு சாணம் பற்றிய விளக்கத்தில், பூஜை, ஹோமம் போன்ற மத ரீதியிலான பயன்பாட்டிற்காக மட்டுமே என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதனையும் தாண்டி, நபர் ஒருவர் அதை வாங்கி டேஸ்ட் செய்தது மட்டும் இல்லாமல், ’மாட்டு சாணம் நல்லாவே இல்லை’ என அதற்கு ரிவ்யூவும் எழுதியிருப்பது, வேடிக்கையாய் அமைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments