அவதூறான பதிவுகள் இணையத்தளக் குற்றமாகக் கருதப்படும் - பீகார் காவல்துறை
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வரவேற்பதாகவும், விமர்சனத்துக்குக் கண்ணியமான சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பீகார் அரசு தெரிவித்துள்ளது.
அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மீது அவதூறு பரப்பும் சமூக வலைத்தளப் பதிவுகளை இணையத்தளக் குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என பீகார் மாநிலக் காவல்துறை அறிவித்தது.
இந்நிலையில் முந்தைய அறிவிப்பு பற்றி மீண்டும் பீகார் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு விமர்சனம் தேவைதான் என்றும், அதே நேரத்தில் விமர்சனம் ஆக்கப்பூர்வமானதாகவும், கண்ணியமான சொற்களைக் கொண்டு நாகரிக வரம்புக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Comments