யுபிஎஸ்சி தேர்வின் கடைசி முயற்சியை தவற விட்டவர்களுக்கு மேற்கொண்டு தேர்வு எழுத வாய்ப்பு இல்லை - கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்
கொரோனா காரணமாக கடைசி முயற்சியில் யுபிஎஸ்சி தேர்வு எழுத முடியாதவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த அக்டோபர் மாதம், யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வை எழுத முடியாதவர்களுக்கு கூடுதல் வாய்ப்பை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, கடைசி முயற்சியை தவற விட்டவர்களுக்கு மேற்கொண்டு வாய்ப்பு அளிக்கப்படாது என்று தெரிவித்தார்.
Comments