இந்தியாவின் அஸ்ட்ரோசாட் கண்டறிந்த விண்வெளியின் டைனோசார் எனப்படும் நட்சத்திர தொகுதி
இந்தியாவின் அஸ்ட்ரோசாட் உதவியுடன், விண்வெளியின் டைனோசார்கள் எனப்படும் நட்சத்திரத் தொகுதி கண்டறியப்பட்டுள்ளது.
காலத்தால் மிகவும் முற்பட்ட, உருண்டைவடிவ தொகுதியில் அமைந்துள்ள நட்சத்திரங்கள் விண்வெளியின் டைனோசார்கள் எனப்படுகின்றன.
அத்தகைய நட்சத்திரங்கள், நட்சத்திரங்களின் தோற்றம், அழிவு பற்றிய ஆராய்ச்சிக்கும் மிக முக்கியமானவை. மிகவும் அரிதாக காணப்படும் அத்தகைய நட்சத்திரத் தொகுதி ஒன்று, இந்தியாவின் அஸ்ட்ரோசாட் விண்வெளி ஆய்வு செயற்கைக்கோள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அஸ்ட்ரோசாட்டில் உள்ள புறஊதா தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டுள்ள தொகுதியில், புறஊதாப் பேரொளி நட்சத்திரங்களில் ஒன்று, சூரியனைப் போல 3 ஆயிரம் மடங்கு பிரகாசமானது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
Comments