கொரோனா வார்டுக்கு மைனஸ் 25 டிகிரி குளிரில் கைக்குழந்தையுடன் நடந்து சென்ற தாய் - மக்கள் போராட்டத்தால் மங்கோலிய பிரதமர் ராஜினாமா!

0 4963

ங்கோலியாவில், கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, மைனஸ் 25 டிகிரி  கடுங்குளிரில் கைக் குழந்தையுடன் ஒரு தாய் சாதாரண உடையுடன், நடக்க வைக்கப்பட்டு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, மக்கள் போராட்டம் வெடித்ததையடுத்து, பிரதமர் உக்னாகின் குரேல்சுக் ( Ukhnaagiin Khürelsükh ) தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ரஷ்யாவுக்கும் சீனாவுக்கு இடையே அமைந்துள்ளது மங்கோலியா. கொரோனா நோய் பரவல் காரணமாக இதுவரை மங்கோலியா நாட்டில் சுமார் 1, 600 பேர் பாதிக்கப்பட்டு இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டில் ஊரடங்கு மற்றும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. பிறகு, பொதுமக்கள் மாகாணம் விட்டு மாகாணம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதனால், மேலும்,  ஜனவரி மாதத்தில் அங்கு மைனஸ் 30 டிகிரி வரை வெப்பநிலை குறைந்து கடுங்குளிர் நிலவும்.

இந்த சூழலில் தான், சில நாட்களுக்கு முன்பு மங்கோலியாவில்  சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி சேனல்களில் ஒரு வீடியோ பரவியது.  வீடியோவில், ஒரு சில நாட்களுக்கு முன்பு பிரசவம் ஆன தாய் தன் பச்சிளம் குழந்தையை கொரோனா பாதித்தது. இதையடுத்து, மருத்துவமனையிலிருந்து கொரோனா வார்டுக்கு  மைனஸ் 25 டிகிரி கடும் குளிரில் வலுக்கட்டாயமாக அந்த பெண் சாதாரண செருப்பு மற்றும் பாதுகாப்பு உடைகள் எதுவுமில்லாமல்  நடத்தி அழைத்துச் செல்லப்பட்டார்.

மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக கடும் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். மங்கோலியா அரசுக்கு எதிராகத் தலை நகர் மட்டுமல்லாமல் பல மாகாணங்களிலும் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. பலரும் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி, முழக்கமிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மங்கோலியா துணைப் பிரதமர், சுகாதாரத் துறை அமைச்சர், மருத்துவமனை தலைவர் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து, மங்கோலியப் பிரதமர் உக்னாகின் குரேல்சும் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

இது குறித்து பேசிய மங்கோலியா பிரதமர் உக்னா குரோல்ஸ் , “துரதிஷ்டவசமாக அந்தத் தாயை இடமாற்றம் செய்யும்போது நாங்கள் தவறு செய்துவிட்டோம். ஒரு தந்தையாகவும், ஒரு பிரதமராகவும் அந்தக் காட்சியைப் பார்க்கும் போது என் மனம் உடைந்துவிட்டது. பிரதமராக இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்பதை தார்மீகம் ” என்று கூறி தெரிவித்துள்ளார். 

பிரதமரின் ராஜினாமா முடிவை வரவேற்றுள்ள போராட்டக்காரர்கள், “கொரோனாவால் பொதுமக்கள் அதிகளவில் உயிரிழக்கமாட்டார்கள். ஆனால், அரசின் தவறான செயல்முறை, திறமையற்ற மருத்துவர்கள் மற்றும் அலட்சியம் காரணமாகவே உயிரிழப்புகள் ஏற்படுகின்றன” என்று மங்கோலிய அரசைக் குற்றம்சாட்டியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments