ஆஸ்திரேலியாவில் ரூ.1.70 கோடி மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் கார் முற்றிலும் எரிந்து சேதம்
ஆஸ்திரேலியாவில் மெர்சிடஸ் பென்ஸ் சொகுசு காரில் பர்ன் அவுட் சாகசத்தை செய்ய முயற்சித்த போது, எதிர்பாராத விதமாக தீப்பற்றியது.
பர்ன் அவுட் என்பது கார் டயரில் தீ பிடிக்கும் அளவுக்கு உராய்வு ஏற்படுத்துவது ஆகும். இந்நிகழ்வின் போது, சில சமயம் கார் தீப்பிடித்து எரிந்துவிடும்.
இந்த நிலையில், சிட்னியில் மெர்சிடஸ் பென்ஸ் சொகுசு காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் சாலையில் வைத்து பர்ன் அவுட் சாகசம் செய்ய முயன்றுள்ளார். அப்போது கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
காரில் இருந்த ஓட்டுநர் உட்பட 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த காரின் மதிப்பு ஒன்னே முக்கால் கோடி ரூபாய் ஆகும். பொது இடத்தில் இதுபோன்று சாகசத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments