துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடுத்த மான நஷ்ட வழக்கில் உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 4497
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடுத்த மான நஷ்ட வழக்கில் உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடுத்த 1 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்பச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூரில் உதயநிதி பேசியபோது, பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்கும் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புள்ளதாகத் தெரிவித்தார். இதையடுத்து ஒரு கோடி ரூபாய் மான நட்ட ஈடு வழங்க உதயநிதிக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு தொடுத்தார்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தன்னைத் தொடர்புப் படுத்திப் பேச உதயநிதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments