ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ள பெரியகுளம் கண்மாய் , தண்ணீர் நிரம்பவிடாமல் தடுப்பதாகக் குற்றச்சாட்டு
தேனி மாவட்டம் பெரியகுளம் கண்மாயை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருபவர்கள், கண்மாயில் தண்ணீர் தேங்கவிடாமல் திறந்துவிடுகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஊரின் பெயரிலேயே உள்ள பெரியகுளம் கண்மாயை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
சுமார் 350 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகக் கூறப்படும் இந்தக் கண்மாயை கிட்டத்தட்ட 100 ஏக்கர் அளவுக்கு சுருக்கி, ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
கண்மாய் நிரம்பும் நிலை ஏற்படும் போதெல்லாம் தங்களது வயல் மூழ்கிவிடக் கூடாது என்பதற்காக தண்ணீரை அவர்கள் திறந்துவிட்டுவிடுகின்றனர் என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்
Comments