கம்போடியாவில் மது அருந்தி கொண்டே யோகா பயிற்சி : மன அழுத்தம் குறைய வித்தியாசமான முயற்சி
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில், மது அருந்தி கொண்டே யோகா பயிற்சி செய்வது பிரபலமாகி வருகிறது.
கொரோனா அச்சம் காரணமாக அந்நாட்டில் அமலில் இருந்த ஊரடங்கு, ஜனவரி முதல் வாரத்தில் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், ஊரடங்கால் வீடுகளிலேயே முடங்கி கிடந்த மக்கள், தற்போது, வழக்கம் போல் உற்சாகத்துடன் பொழுதை கழித்து வருகின்றனர்.
அந்த வகையில், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டே யோகா பயிற்சியில் ஈடுபடுவதற்கும் கம்போடியா மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் மூலம் மன அழுத்தம் குறைவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Comments