வட மாநிலங்களை வாட்டி எடுக்கும் கடுங்குளிர்; பனி மூட்டத்தால் சாலையில் வாகனங்கள் மெதுவாக இயக்கம்

0 741
வட மாநிலங்களை வாட்டி எடுக்கும் கடுங்குளிர்; பனி மூட்டத்தால் சாலையில் வாகனங்கள் மெதுவாக இயக்கம்

ட மாநிலங்களில் பனி மூட்டத்தால் பார்வைப் புலப்பாடு குறைந்ததால் வாகனங்கள் மெதுவான வேகத்தில் இயக்கப்படுகின்றன.

வடக்கு ரயில்வேக்குட்பட்ட பகுதிகளில் 10 விரைவு ரயில்கள் பலமணி நேரம் தாமதமாகச் செல்கின்றன. டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுங்குளிர் நிலவுகிறது.

டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 6 புள்ளி 8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. காலை எட்டரை மணி வரையிலும் கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் பார்வைப் புலப்பாடு குறைந்துள்ளது.

இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி மெதுவாகச் செல்கின்றன. வடக்கு ரயில்வேக்குட்பட்ட 10 விரைவு ரயில்கள் பல மணி நேரம் தாமதமாகச் செல்கின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments