விவசாயிகளின் போராட்டம் 58வது நாளாக நீடிப்பு... அமித் ஷாவுடன், நரேந்திர சிங் தோமர் ஆலோசனை
டெல்லியில் 58 வது நாளாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மத்திய அரசின் சமரசத்தை நிராகரித்துள்ளனர்.
18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்ட போதும் அவற்றை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை அவருடைய இல்லத்தில் சந்தித்த வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சுமார் ஒருமணி நேரம் ஆலோசனை நடத்தினார். இன்று மீண்டும் 11 வது சுற்று பேச்சுவார்த்தைக்கு விவசாயிகளுடன் பேச்சு நடத்த உள்ள மத்திய அரசு போராட்டத்தை சுமுகமாக முடித்து வைக்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறது.
குடியரசு தின நாளில் டிராக்டர் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் முக்கியத் திருப்பம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments