பிலிப்பைன்ஸ் நாட்டை உலுக்கிய தீவிர நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
தெற்குப் பகுதியில் உள்ள டாவோ நகரின் தென் கிழக்கில் சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்தப் பூகம்பம், மற்றொரு தீவான மின்டானோவோவைத் தாக்கியது. ரிக்டர் அளவு கோலில் 7 புள்ளி 1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின.
இதனால் பீதியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக சேதமும் இல்லை, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என பிலிப்பைன்ஸ் அரசு கூறியுள்ளது.
Comments