சசிகலாவுக்கு தீவிர நிமோனியா பாதிப்பு- பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தகவல்
சசிகலாவுக்கு, கொரோனா வைரஸால் ஏற்படும் நிமோனியா பாதிப்பு தீவிரமாக இருப்பதால், அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரூ விக்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 66 வயதான சசிகலாவுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு பாதிப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவின் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்றவற்றையும் தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவின் அளவு 95 சதவீதமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
நுரையீரலில் தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால், மூச்சிரைப்பு இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு, கொரோனாவுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் பெங்களூரூ விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
Comments