அசல் எல்லைக்கோடு அருகே மேலும் 10, 000 வீரர்களை நிறுத்த திட்டம்- ராணுவத்தளபதி நரவனே
சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்த ஆண்டு இறுதிக்குள் பத்தாயிரம் வீரர்களை அசல் எல்லைக்கோடு அருகே நிறுத்தி வைக்க ராணுவம் முடிவு செய்துள்ளது.
எல்லையில் முன்களத்தில் நிற்கும் வீரர்களுக்கு உடனடியாக உதவும் வகையில் இந்த படை தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்படும். வாயிலில் எதிரி வந்து நிற்கும் போது யுத்தப் பயிற்சிகளில் வெற்றிடம்விட முடியாது என்று ராணுவத்தளபதி நரவனே தெரிவித்துள்ளார்.
எல்லையில் சீனாவின் ஆக்ரமிப்பை அடுத்து உடனடியாக தற் பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது என்று கூறிய நார்வானே ராணுவத் தொழில்நுட்பம், தீவிர பயிற்சிகள் குறித்த அவசியத்தை வலியுறுத்தினார்.
Comments