கர்நாடகாவில் வெடிவிபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு
கர்நாடக மாநிலம் ஷிவமோகா அருகே டைனமைட் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் வெடித்து 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
அப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரிக்கு லாரியில் வெடிபொருட்களை ஏற்றிக் கொண்டு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. லாரியில் சென்ற பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் 10 பேர் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடிவிபத்து நிகழ்ந்தபோது ஷிமோகா மட்டுமின்றி, தாவணகரே, உத்தர கன்னடா, சிக்கமகளூரு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் பயங்கர சத்தமும், நில அதிர்வும் உணரப்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.
Comments