அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கம் ?
உய்குர் முஸ்லீம்கள் தொடர்பாக தவறான தகவல்களை வழங்கியதாக அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
உய்குர் இனப் பெண்கள் குழந்தைகள் பெற்றுத் தரும் இயந்திரம் அல்ல என்றும், ஷியான்ஜிங்கில் உள்ள பெண்களிடம் பாலின சமத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டதாக அந்த ட்விட்டர் கணக்கில் கூறப்பட்டிருந்தது. ஆனால் உய்குர் முஸ்லீம்களை சீனா இனப்படுகொலை செய்வதாக கருத்துக் கூறியுள்ள அமெரிக்கா, தங்கள் நாட்டில் உள்ள சீனத் தூதரகத்தின் ட்விட்டர் கணக்கை முடக்கியது.
ஆனால் தங்களைப் பற்றி தவறான தகவல் பரப்பப்பட்டதால் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக சீனா கருத்துக் கூறியுள்ளது.
Comments