கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் 7 புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டதில் அதிருப்தி

0 980
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் 7 புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டதில் அதிருப்தி

புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட கர்நாடக அமைச்சரவையில் ஏழு அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டதில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் சில அமைச்சர்கள் கலந்துக் கொள்ளாததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆயினும் இதனை மறுத்துள்ள எடியூரப்பா கலந்து கொள்ளாத அமைச்சர்கள் முன்கூட்டியே அனுமதி பெற்றனர் என்றும் அடுத்த முறை அமைச்சரவைக் கூடும் போது அனைத்து அமைச்சர்களும் கலந்துக் கொள்வார்கள் என்று தெரிவித்தார்.

புதிய அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீடு காரணமாக அமைச்சரவையில் செய்யப்பட்ட மாற்றங்களால் அமைச்சர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்திருப்பதாக தகவல் வெளியானது.

சில அமைச்சர்கள் வெளிப்படையாகவே முதலமைச்சரிடம் தங்கள் இலாகாவை மாற்றித் தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments