பிரான்சில் இருந்து இந்தியா வரும் 3 ரபேல் போர் விமானங்கள் : நடுவானில் எரிபொருள் நிரப்ப ஐக்கிய அரபு அமீரக விமானப் படை விமானம் உதவி என தகவல்

0 4521
பிரான்சில் இருந்து இந்தியா வரும் 3 ரபேல் போர் விமானங்கள் : நடுவானில் எரிபொருள் நிரப்ப ஐக்கிய அரபு அமீரக விமானப் படை விமானம் உதவி என தகவல்

பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு 3 ரபேல் போர் விமானங்கள் கொண்டு வரப்படும் போது நடுவானில், ஐக்கிய அரபு அமிரக விமானப் படை விமானம் எரிபொருள் நிரப்பும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய விமானப் படையில் 8 ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 விமானங்கள் இம்மாத இறுதிக்குள் இந்தியா வர இருக்கின்றன.

இடை நிறுத்தம் இல்லாமல் 8 மணி நேரம் பயணம் செய்து இந்தியா வரும் போது, நடுவானில் ஐக்கிய அரபு அமீரக விமானப் படையின் ஏர்பஸ் டேங்கர் விமானம் மூலம் எரிபொருள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

அதே போன்று வரும் ஏப்ரல் மாதம் 7 ரபேல் விமானங்கள் இந்தியா கொண்டு வரப்படும் போதும் எரிபொருள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை இருதரப்பு ராணுவ உறவை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments